காலை உணவு வழங்கும் திட்ட விழாவில் தாமதம்: தலைமையாசிரியை சஸ்பெண்ட்?


x

தாமதமாக காலை உணவு வழங்க காரணமாக இருந்த தலைமையாசிரியை உட்பட 3 பேர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே தாமதமாககாலை உணவு வழங்க காரணமாக இருந்த தலைமையாசிரியை உட்பட 3 பேர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவெழுந்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்கவிழாவில் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளின் வருகைக்காக அதிகாரிகள் மாணவர்கள் காலை 9.45 மணி வரை காத்திருக்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்க காரணமாக இருந்த பள்ளித் தலைமையாசிரியை குருபிரபாவை தற்காலப் பணியிடை நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றும் தலைமையாசிரியை, நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தவிடப்பட்டுள்ளதாகவும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாய்மொழியாக தெரிவித்துள்ளார்.


Next Story