கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
x

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் காலனி மணி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், தமிழகத்தில் டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கர்நாடகா அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story