ஈரோட்டில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பாலம் இடிப்பு


ஈரோட்டில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பாலம் இடிப்பு
x

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பாலம் உள்ளது. இதனிடையே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனையடுத்து பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு பாலத்தை இடித்து அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.


1 More update

Next Story