சேலத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம் மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். தலைவர் முகிலன், பொருளாளர் செல்லதுரை, செயல் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏஜெண்டுகளை ஊக்குவிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏஜெண்டுகள் மூலம் வந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு உரிமம் வழங்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story