தர்மபுரியில், நாளைஅ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை


தர்மபுரியில், நாளைஅ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 19 July 2023 1:00 AM IST (Updated: 19 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story