தர்மபுரியில்பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 1:00 AM IST (Updated: 22 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோபாலன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். எம்பிளாய் யூனியன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த ஊழியர்களை அனைத்து பகுதியில் உள்ள சேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை ஆள் குறைப்பு செய்யக் கூடாது. ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் வழிமுறையை பின்பற்றி ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உமாராணி, பழனி, பாஸ்கரன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story