மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 1:00 AM IST (Updated: 23 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் மாவட்ட அமைப்பாளர் கலாவதி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா, மாவட்ட துணைத்தலைவர் அங்கம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கைது செய்ய வேண்டும்

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக பழங்குடியின மக்களை தாக்கியும், வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்ட உடமைகளை சேதப்படுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கலவரத்தை உரிய நேரத்தில் தடுக்க தவறியதாக மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story