தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிபா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிபா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 1:00 AM IST (Updated: 24 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மொரப்பூர், பாலக்கோட்டில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மொரப்பூரில் கிழக்கு மண்டல பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒன்றிய தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரசாத், மண்டல பொதுச்செயலாளர்கள் விஜயராஜ், சுரேஷ், பிரசார பிரிவு மண்டல தலைவர் வடிவேல், மண்டல துணைத்தலைவர்கள் வேல்முருகன், சேகர், நிர்வாகிகள் கந்தையன், சிற்றரசு, தங்கமணி, பிரபு, கனகராஜ், திருஅருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி மண்டல தலைவர் சத்தியபிரியன் நன்றி கூறினார்.

பாலக்கோடு

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், ஊழலை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் அணி மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். நகர தலைவர் வேலு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சசிகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் முனிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மண்டல பொதுச்செயலாளர் சத்யவேலு, நகர செயலாளர் அருண், மூத்த நிர்வாகி வேடியப்பன், நிர்வாகிகள் சுரேஷ் பாபு, தர்மலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும். மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். கஞ்சா, சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story