விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2023 1:00 AM IST (Updated: 12 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் முத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் முருகன், பாண்டியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினக்கூலியாக ரூ.600 வழங்கவேண்டும். வேலை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகளான மருத்துவவசதி, குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வேலை செய்து முடித்த தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story