சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று சி.ஐ.டி.யு. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல்லில் காந்திசிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் வருதராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், சிவராஜ் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story