தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மகளிரணி அமைப்பு செயலாளர் விஜயகுமாரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு தனி முன்னுரிமைப்பட்டியல் வழங்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் 5:2 என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story