விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அரசன் முன்னிலை வகித்தார். நாமக்கல் நகர செயலாளர் வணங்காமுடி அனைவரையும் வரவேற்றார்.

மாநில துணைச் செயலாளர்கள் வைகறைச்செல்வன், குமணன் பாலு மற்றும் நாடாளுமன்றத் தொகுதி துணை செயலாளர் கபிலன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தியும், பட்டியலின மக்கள் கோவிலில் வழிபடுவதை தடுப்பவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே பட்டியல் இன மக்கள் கோவிலில் வழிபட கோர்ட்டு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், எனவே கலெக்டர் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் சேந்தமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story