இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
ராசிபுரம்
காரல் மார்க்ஸ் பற்றி அவதூறாக பேசிய தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ராசிபுரம் நகரம் மற்றும் வெண்ணந்தூர் நகர ஒன்றிய குழு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் நகரச் செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட நிர்வாக குழு நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, செங்கோட்டையன், மாவட்ட குழு மீனா, சாதிக் பாட்சா, சலீம் ஆகியோர் பேசினர். கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பயாஸ், அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெண்ணந்தூர் ஒன்றிய குழு மாதேஸ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






