காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
தர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தர்மபுரி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கோட்ட இணைச்செயலாளர் மாதேஸ்வரன், நிர்வாகி சந்திரமவுலி, ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர்வாகி சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறுவதற்கு முன்னரே இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும். ஓய்வூதியர்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டு துறை ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story