காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் தீர்த்தராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா ராகுல்காந்தி மீதான மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து பேசினார். இதில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் சபீர்பாஷா, நிர்வாகிகள் மஜீத், ஆரிப், சுகில், சபீல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீபன், நகர காங்கிரஸ் தலைவர் வேடியப்பன் உள்ப்ட ஏராளமான பெண்கள், முஸ்லிம்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story