தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செங்கோட்டில தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியதை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை போராடி பெற்ற உரிமைகளை பறிப்பதாகும். எனவே தமிழகத்தில் புதிதாக இயற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலையை மீண்டும் 8 மணி நேரமாக மாற்றம் செய்திட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராயப்பன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்டத் துணைத் தலைவர் செங்கோடன், மாவட்ட உதவி செயலாளர்கள், சிவராஜ், சுரேஷ், ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story