தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 1:00 AM IST (Updated: 28 Jun 2023 1:26 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் இளவேனில், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு தயாரிப்பதை சத்துணவு ஊழியர்களே நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் வழங்க வேண்டும். சத்துணவுத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட நிர்வாகிகள் குமரன், சண்முகம், வேலூர் மாவட்ட தலைவர் சேகர், கரூர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயராம், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பொருளாளர் மாதம்மாள், அனுசுயா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story