இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்


இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பாலஸ்தீனம் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் அப்துல் சலாம், முகமது ஹாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி வருகிறது. அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் வாழும் கட்டிடங்கள் வான்வழி தாக்குதல் மூலம் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், பாலஸ்தீன் மக்களை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வக்கீல் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story