கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சத்துணவு சமையலர், உதவியாளர், அங்கன்வாடி உதவியாளர்களையும், அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட கருவூலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில தலைவர் அனுசுயா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட துணை தலைவர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.