ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
குறைந்தபட்ச அடிப்படை ஊதியமே ரூ.18 ஆயிரமாக உள்ள சூழலில் போனஸ் கணக்கிட பயன்படுத்தும் 700 எனும் உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும். உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கிட வேண்டும்.
2022-23-ம் நிதியாண்டில் ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக போனஸ் நாட்களை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ரெயில் நிலையம் முன்பு தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.) மத்திய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கரூர் கிளை தலைவர் முருகதாஸ் தலைமை தாங்கினார். இதில் சேலம் கோட்ட தலைவர் முருகேசன், கிளை பொருளாளர் வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story