டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்வு, தீபாவளி போனஸ் ஆகியவற்றை வழங்கக்கோரியும், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஏற்றுக்கூலியை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனி, பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் சி.ஐ.டி.யு. துணைத்தலைவர் புருஷோத்தமன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சுமைப்பணி தொழிலாளர் சங்க துணைத்தலைவர் தங்கதுரை நன்றி கூறினார்.


Next Story