வரும் 12-ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள் அறிக்கை
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தை பொறுத்தவரை அரசுக்கும் கவர்னருக்கும் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல சர்ச்சைகளும், பல விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், கவர்னர் மாளிகை முன்பு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 12ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக மர்மமானதாக இருக்கின்றன என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கிறார். குறிப்பாக சனாதானம், வர்னாசிரமத்திற்கு ஆதரவாக பொது மேடைகளில் கவர்னர் பேசியவை அபத்தமானவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை கவர்னர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.