டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 26 Sep 2023 8:15 PM GMT (Updated: 26 Sep 2023 8:16 PM GMT)

ஆனைமலை அரசு பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி சுந்தரி வரவேற்றார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் பேசும்போது, வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டயர், உடைந்த குடம், ஆட்டுகல், உரல் போன்ற பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். லேசான காய்ச்சல், இருமல், சளி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பேரூராட்சி ஊழியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story