தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 30 Oct 2023 2:47 AM GMT (Updated: 30 Oct 2023 3:55 AM GMT)

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் படத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மேலும் அமைச்சர்கள், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story