தேவர் ஜெயந்தி: சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டும், 61-வது குருபூஜையை முன்னிட்டும் வருகின்ற 28-ந்தேதி முதல் 30-ம்தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் வருகிற 30-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story