திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் இன்று பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பக்தர்கள் அதிகாலையில் இருந்து கடலில் புனித நீராடி, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் கூடுதல் கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story