ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x

ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 6 வாரங்கள் தொடர்ச்சியாக வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

மூலவருக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், ரூ.50, ரூ.100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு வெளியேயும், காத்திருப்பு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story