கார்த்திகை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்...!


கார்த்திகை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்...!
x
தினத்தந்தி 23 Nov 2022 9:04 AM IST (Updated: 23 Nov 2022 10:31 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம்,

புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜைகள் செய்து, பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள்.

அதிலும் ஆடி, தை அமாவாசை நாட்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையின்போது பல லட்சம் பேர் திரள்வார்கள்.

இந்த நிலையில் இன்று கார்த்திகை மாதத்தின் சர்வ அம்மாவாசை நாள் என்பதால், ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் தரிசிக்கவும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் குவிந்தனர் கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்தனர்.

தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சென்றதுடன் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். இதேபோல் தனுஷ்கோடி கடல் பகுதியிலும் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


Next Story