பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு


பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 30 Sep 2023 7:15 PM GMT (Updated: 30 Sep 2023 7:15 PM GMT)

பெருமாள் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்
கோவை


புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி, கையில் செங்கோல் ஏந்திய அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இங்கு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.


கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.

கோவில் வளாகத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றி பெருமாளை வழிபட்டனர். இதேபோல் பீளமேடு ஆஞ்சநேயர் கோவில், ஒலம்பஸ் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.



Next Story