தருமபுரி: கனமழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்.. நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
தருமபுரியில் பெய்த கனமழையால் மஞ்சவாடியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பெய்த கனமழையால் மஞ்சவாடியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்டரோடு, மஞ்சவாடி, கோம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மஞ்சவாடி பகுதியில் சிற்றாறாக உருவெடுத்து, பீனியாற்றில் கலப்பதால், 6 அடி உயர்மட்ட மேம்பாலத்தை கடந்து வெள்ளம் பாய்ந்தோடியது.
இதனால், அரூர்-சேலம் இடையேயான சாலையில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில இடங்களில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story