பா.ஜனதாவினர் தர்ணா போராட்டம்


பா.ஜனதாவினர் தர்ணா போராட்டம்
x

தென்காசியில் பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் கழிவுநீர் ஓடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சரியாக செல்ல முடியாமல், அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்து சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே கழிவுநீர் ஓடையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர தலைவர் மந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேகர், ராஜ்குமார், ராமானுஜம் கருப்பசாமி, இந்து முன்னணி நகர தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கூலக்கடை பஜாரில் கழிவுநீர் ஓடையை சரிசெய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story