சொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


சொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2023 9:30 PM GMT (Updated: 17 Oct 2023 9:31 PM GMT)

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியின் வருமானத்தை பெருக்கும் வகையில், நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்வதற்கு அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், வார்டு வாரியாக சென்று வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வரி செலுத்தாமல் நீண்டநாள் நிலுவையில் வைத்துள்ள நபர்களுக்கு நோட்டீஸ் வழங்குகின்றனர். அதன்பின்னரும் பலர் வரி செலுத்தாமல் உள்ளனர்.

எனவே சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் 15 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரவுண்டுரோடு புதூர், நாகல்புதூர், சாமியார்தோட்டம், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.


Next Story