மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.1 லட்சம் 'அபேஸ்'
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளியும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடிவிட்டார்.
இதுகுறித்து உச்சிமாகாளி ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story