தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை


தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2023 6:25 AM IST (Updated: 3 Dec 2023 6:42 AM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story