தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்;

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவரும் ஊராட்சிக்குழு தலைவருமான ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலிராஜேந்திரன், முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நகர அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக வார்டுகளில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.


Next Story