தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு....'' - எடப்பாடி பழனிசாமி


தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு.... - எடப்பாடி பழனிசாமி
x

அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதாவது;

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 2 காலத்திற்குள் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

விலை உயர்வால் கிலோ கணக்கில் வாங்க வேண்டிய தக்காளியை மக்கள் தற்போது எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கும் நிலை உள்ளது. தக்காளிக்கு பதிலாக ஆப்பிளே வாங்கிவிடலாம். ஏனெனில், ஆப்பிள் விலைக்கு தக்காளியில் விலை உள்ளது.

அத்துடன், தாலிக்கு தங்கம் திட்டம் மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றையும் திமுக அரசு நிறுத்திவருகிறது.

மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். தேர்தல் வந்தால் சிறப்பாக பேசுவார்கள். குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை என கூறிவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

1 More update

Next Story