தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு


தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
x

விளையாட்டு போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட், நீச்சல் செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவுக்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.ஏவுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் எம்.பி. கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்துவெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாணவர் அணி மாநில செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகர தி.மு.க. செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பிஎம்.குமார்,படுநெல்லி பி.எம். பாபு, வாலாஜாபாத் பி.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய குழு தலைவர்கள் மலர்கொடி குமார், ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் மா.வினோத்குமார், ஏ.தினேஷ், சாகுல் ஹமீது, ஜெ.ஆர். சதீஷ்குமார், சி.நவீன், மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும், விளையாட்டு வீரர்களும் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story