தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மனைவியிடம் 12 பவுன் நகை பறிப்பு


தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மனைவியிடம் 12 பவுன் நகை பறிப்பு
x

வீட்டில் தனியாக இருந்த தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மனைவியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 12 பவுன் நகை பறிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

நகை பறிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் குளம் எதிரே அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரனுக்கு சொந்தமான இந்த அடுக்கு மாடி குடியிருப்பு தரைத்தளத்தில் அலுவலகமும் 2-வது மாடியில் மனைவியுடன் ஜெயசந்திரனும் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் ஜெயசந்நதிரன் அலுவலகத்தில் இருந்த போது அவரது மனைவி மேகலா (வயது 55) 2-வது மாடியில் வீட்டில் தனிமையில் இருந்தார். அப்போது ஒரு பெண் தனிமையில் இருந்த மேகலாவிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று வாங்கி குடித்தார்.

நேற்றும் அங்கு வந்த அந்த பெண் மேகலா முகத்தில் மிளகாய் பொடி தூவி அவர் அணிந்து இருந்த 12 பவுன் நகையை பறித்து சென்று விட்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் திரும்பும்போது முகத்தை துணியால் முடிகொண்டு படியிறங்கி சென்றுள்ளதாகவும், திருநங்கையாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி, திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.


Next Story