தி.மு.க. கொடியேற்று விழா


தி.மு.க. கொடியேற்று விழா
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)

பாவூர்சத்திரம் பகுதியில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு, கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் (தெற்கு), மலையராமபுரம், நாட்டார்பட்டி, சென்னல்தா புதுக்குளம், மருதடியூர், ராமனூர் விலக்கு, வெள்ளகால் ஆகிய 7 இடங்களில் கட்சி கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கட்சி கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஆர்.கே.காளிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story