சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. அரணாக இருக்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. அரணாக இருக்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Feb 2024 6:15 PM GMT (Updated: 18 Feb 2024 6:15 PM GMT)

முஸ்லிம் சகோதரிகள் எப்போதும் தி.மு.க. ஆட்சிக்கு துணையாக இருந்து இருக்கிறீர்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.

நெல்லையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் இல்ல திருமண விழாக்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, அவர் பேசும் போது கூறியதாவது:-

சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க. அரசு என்றும் அரணாக, துணையாக இருக்கும். தற்போது மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் வாக்கெடுப்புக்கு வந்த போது, இதை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதால், வாக்களித்தோம் என எடப்பாடி பழனிசாமி தற்போது பல்டியடித்து பேசுகிறார். இது சிறுபான்மை மக்களை ஏமாற்றும் செயலாகும்.

நான் எம்.எல்.ஏ. ஆன பிறகு குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்தெறிந்து முதல்முறைாக கைது செய்யப்பட்டேன். முஸ்லிம் சகோதரிகள் எப்போதும் தி.மு.க. ஆட்சிக்கு துணையாக இருந்து இருக்கிறீர்கள். அதுபோல் எப்போதும் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story