"பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது"- அண்ணாமலை பேட்டி


பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது- அண்ணாமலை பேட்டி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 22 Oct 2023 4:28 PM IST (Updated: 22 Oct 2023 4:30 PM IST)
t-max-icont-min-icon

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அதிக உதவிகளை செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது;

"கொடிக்கம்பம் விவகாரத்தில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டது பாஜகவிற்கு நல்லது தான். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும். ஒன்று தானாக வளர்ந்து வருவது, இன்னொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அதிக உதவிகளை செய்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை சந்திக்கும் போது தான் ஒரு தொண்டன் தலைவனாக முடியும். சென்னையில் எத்தனை திமுக கொடி கம்பத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்..

நவ.1 முதல் 100 நாட்களுக்கு 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றே கொடிக்கம்பங்கள் நடப்படும். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் கொடிக்கம்பங்களை தாமதமாக வைத்து வந்த தொண்டர்கள் இதன் பிறகு துரிதமாக வைப்பார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story