செங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம்
செங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
தென்காசி தெற்கு மாவட்ட மற்றும் செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அண்ணாதிடலில் நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம், மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரஜப்பாத்திமா, மு.நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி வரவேற்று பேசினார்.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தனுஷ் எம்.குமார் எம்.பி., சேலம் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அ.புவனேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் வக்கீல் ஆபத்துகாத்தான், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், அழகுசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி பாஞ்ச்பீர்முகம்மது நன்றி கூறினார்.
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி பயிற்சி பாசறை கூட்டம் சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி வரவேற்றார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயா சவுந்தர பாண்டியன் தொகுத்து வழங்கினார். நகர செயலாளர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் விழா பேரூரை ஆற்றினார்.