தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்


தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகாரில் தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகாரில் தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தமிழரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் தியாகராஜன், ஆதிதிராவிட நல குழு தலைவர் முத்தமிழ் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி சரவணன் நன்றி கூறினார்.


Next Story