'தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது' - கவர்னர் மாளிகை விளக்கம்


தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது - கவர்னர் மாளிகை விளக்கம்
x

குடும்ப உறுப்பினர்களுக்காக அரசு பணத்தை செலவிடவில்லை என்று கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய போது, ஊட்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதற்கு கவர்னர் மாளிகை தற்போது விளக்கமளித்துள்ளது. அதில் தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், உண்மைக்கு புறம்பானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்ப விழாவின் போது கவர்னரின் உறவினர்கள் அனைவரும் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டதாகவும், ஊட்டி ராஜ்பவனில் தங்கவைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கவர்னரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்தவில்லை என்றும் உணவு, டீ, காபி உள்ளிட்ட அனைத்தும் தனியார் கேட்டரிங் நிறுவனம் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும், ராஜ்பவனின் சமையலறையை பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்ப உறுப்பினர்களுக்காக அரசு பணத்தை கவர்னர் செலவிடவில்லை என்றும், ஒவ்வொரு மாதமும் குடும்ப உறுப்பினர்களின் செலவு முழுவதையும் கவர்னரே ஏற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story