தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா


தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா
x
தினத்தந்தி 8 Oct 2023 12:30 AM IST (Updated: 8 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story