தி.மு.க. தெருமுனை கூட்டம்


தி.மு.க. தெருமுனை கூட்டம்
x

கீழப்பாவூரில் தி.மு.க. தெருமுனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி

பாவூர்சத்திரம்:

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தெருமுனைக்கூட்டம் கீழப்பாவூர் மைதானத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் ஆர்.ஜெகதீசன் தலைமை தாங்கினார். பேரூர் துணைச் செயலாளர் இல.அறிவழகன், பொருளாளர் தேவேந்திரன், மாவட்ட பிரதிநிதி தங்கப்பாண்டி‌ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கா.ராஜாமணி வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மாநில பேச்சாளர்கள் தூத்துக்குடி சரத்பாலா, உடன்குடி தனபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, ஜெயகுமார், அழகுசுந்தரம், செல்லத்துரை, சேர்மதுரை, நகர செயலாளர்கள் ஜெயபாலன், பிரகாஷ், பேரூர் செயலாளர்கள் சுடலை, லட்சுமணன், பண்டாரம், மாரிமுத்து, குட்டி, முத்தையா, மாவட்ட கவுன்சிலர் இரா.சாக்ரடீஸ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணை செயலாளர் சிவஅருணன், மாணவரணி துணை அமைப்பாளர்கள் அரவிந்த் மணிராஜ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராசாத்தி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் சமுத்திரகனி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

----

மேலாளர் அவர்கள் பார்வைக்கு.


Next Story