"திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர்" - அண்ணாமலை விமர்சனம்
சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர், அதை யாரும் சாப்பிட முடியாது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்
திருச்சி,
திருச்சியில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ,
சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர், அதை யாரும் சாப்பிட முடியாது.
தமிழகத்தை திராவிட முன்னேற்ற கழகத்திடமிருந்து மீட்பதே பாஜக கொள்கையாக இருக்கிறது. ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை.
இந்தியாவை பொறுத்தவரை ஒற்றைக் கட்சியான பாஜகதான் இனி ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story