திமுக கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுப்பொலிவூட்டப்பட்ட திமுக இணையதளத்தை அக்கட்சி தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்ட இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், சாதனைகள் உள்ளிட்டவை இணையதளத்தில் நிறைந்துள்ளது.
திமுக கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story