ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது - அமைச்சர் எச்சரிக்கை


ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது - அமைச்சர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2022 5:07 PM GMT (Updated: 21 Sep 2022 5:08 PM GMT)

ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு, உப்பு போன்ற மற்ற பொருட்களையும் வாங்க ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, குட்டத்துப்பட்டி ஆகிய ஊர்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நேர நியாய விலைக் கடைகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.


Next Story