திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது: திமுகவினருக்கு அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்


திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது: திமுகவினருக்கு அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 March 2023 8:29 AM GMT (Updated: 16 March 2023 10:30 AM GMT)

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர், அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பேனர்கள், கட் அவுட் மற்றும் பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்.

அந்த அறிக்கையில், கடந்த 2019ல் அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட்டுகளால் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து திமுக நிகழ்ச்சிகளில் பேனர் மற்றும் கட் அவுட் வைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்போது திமுக நிர்வாகிகள் அந்த அறிவிப்பை பின்பற்றி வந்தனர். ஆனால் தற்போது திமுக நிர்வாகிகள் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்படுவதாக திமுக தலைமைக்கு தகவல் வந்துள்ளது. எனவே அதனை நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்.

திமுக நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அனுமதி பெற்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வைக்கலாமே தவிற பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது. தொடர்ந்து பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும்பட்சத்தில் கட்சித்தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story